சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பேரறிவாளன், வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று (வியாழன்) காலை அவர் புழல் சிறையில் இருந்து சென்னை ராஜீவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதார அதிகாரி இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுநீரக தொற்றுக்கு பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கைதிகள் அறையில் 3 நாள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டைக்கு மாற்றப்படுகிறார் என்று தெரிவித்தார்.