புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2015

எதிர்பாராத வேளையில் நாடாளுமன்றம் கலையும் : மைத்திரி உறுதி


எவரும் எதிர்பாராத விதத்தில் விரைவில் திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியிடம் உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
நேற்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் , பிரதித் தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம்,இராஜாங்க  அமைச்சர் வி.இராதகிருஸ்ணன், ஆகியோர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்பொது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
குறித்த சந்திப்பு தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியதாவது,
 
எமது சந்திப்பின் போது பல்வேறு விடயங்களை நாம் கலந்துரையாடினோம்.ஜனாதிபதி எம்மிடம் கூறிய விடயங்களில் ஊடகங்களுக்கு கூறக்கூடிய  விடயங்களாக,
 
பிரதமர் 24ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்க கூறியிருக்கலாம்.இந்த நாடாளுமன்றம் இனியும் தொடர முடியாது.இது கலைக்கப்பட வேண்டும்.அதற்கான முடிவை நான் எடுத்து விட்டேன்.திட்டவட்டமான திகதியை நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை.இன்னமும் சில தினங்னளில் திகதி தீர்மானிக்கப்படும்.
 
 
எதிர்பாராத விதத்தில் விரைவில் திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதை உங்களுக்குக் கூறி வைக்க விரும்புகிறேன்.என்று ஜனாதிபதி எம்மிடம் கூறினார்

ad

ad