புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2015

மேல் மாகாண முதலமைச்சரின் பதவி பறி போகுமா? - பதவியை பறிக்க சந்திரிகா சதி: பிரசன்ன


மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாகவே ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட மைத்திரி அணியினர் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்சவை மீண்டும் அந்த பதவிக்கு கொண்டு வரும் சதித்திட்டம் ஒன்றை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கொண்டு வருகிறார்.
இது சம்பந்தமாக அவர் பல்வேறு தரப்பினருடன் சுமார் மூன்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிய கிடைத்துள்ளதாக பேசப்படுகிறது.
இதனடிப்படையில், அவருக்கு எதிராக துரிதமான ஒழுக்காற்று விசாரணை நடத்த கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னை பதவி நீக்கும் நடவடிக்கையில் முன்னாள் ஜனாதிபதி: மேல் மாகாண முதலமைச்சர்
மேல் மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து தன்னை நீக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தான் நாட்டில் இல்லாத நேரத்தில் சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு மேல் மாகாண சபை உறுப்பினர்களையும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்களையும் அழைத்து பேசியிருப்பதாகவும் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
அந்த சந்திப்பில் கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தான் நாடு திரும்பிய பின்னர் சகல தகவல்களையும் வழங்கியதாக மேல் மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad