புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

யாழ். நீதிமன்ற தாக்குதல்: 6 பேர் பிணையில் விடுதலை! 34 பேருக்கு 8ம் திகதிவரை விளக்கமறியல்!


யாழ்.  நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 40 பேர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு 2 லட்சம் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 34 பேரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் கே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
இதில் ஒருவர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. அவர் காயம் காரணமாக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் 132 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் 8 பேருக்கு மாத்திரம் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பொது சொத்து சேதம், சிறுகாயம் ஏற்படுத்தல், கடும் காயம் ஏற்படுத்தல், நீதிமன்ற தாக்குதல், பொலிஸார் மீது தாக்குதல், கடமைக்கு இடையூறு ஏற்படுத்தல், அத்துமீறி நுழைதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது

ad

ad