புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

பிபா தலைவர் செப் பிலாட்டெர் திடீர் ராஜினாமா: ஃபிபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்!


சுவிட்சர்லாந்தை சேர்ந்த செப் பிலாட்டெர் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே ஃபிபா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
செப் பிலாட்டெர் (Sepp Blatter) ஃபிபா அமைப்பின் தலைவராக 1998 ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த 17 ஆண்டுகளாக ஃபிபாவின் தலைவராக அவர் செயல்பட்டுவந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலககோப்பை கால்பந்து போட்டிகளில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிபா) தலைவராக சில தினங்களுக்கு முன்பு 5வது முறையாக செப் பிளாட்டர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் ஃபிபா நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்பியதால் அவருக்கு இங்கிலாந்து, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து 79 வயதான செப் பிளாட்டர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ஜூரிச்சில் நடைபெற்ற ஃபிபா மாநாட்டில் கலந்துகொண்ட பிலாட்டெர் பேசுகையில், கடந்த 40 ஆண்டுகளாக எனக்கும் கால்பந்து மற்றும் ஃபிபா அமைப்புக்கும் இடையே பிரிக்கமுடியாத பந்தம் இருந்துவருகிறது.
ஃபிபா அமைப்பை மற்ற அனைத்தையும் விட அதிகமாக நேசிக்கிறேன். தற்போது தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்று முடிவு செய்துள்ளேன், எனினும் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இந்த பதவியில் தொடரவுள்ளேன்.
உலக கால்பந்து அமைப்பில் தனக்கு முழுமையான ஆதரவு கிடைக்காததால் இந்த முடிவை எடுத்ததாக கூறிய அவர், ஃபிபா அமைப்பின் தலைவருக்கான தேர்தலை உடனே நடத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஃபிபா தலைவர் பதவி ராஜினாமாவிற்கு காரணமான கடிதம்!
தென் ஆப்ரிக்க கால்பந்து சங்கம் எழுதிய ஒரு கடிதம்தான் தற்போது ஃபிஃபா தலைவர் பதவியை ராஜினாமா செய்ய காரணம் என்று தெரியவந்துள்ளது.
செப் பிலாட்டெருடைய 17 ஆண்டு கால தலைமையின் கீழ்தான் ஃபிபாவில் அதிகபட்ச அளவில் நிதிமுறைகேடு நடந்ததாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஃபிபா தலைவர் பதவியில் இருந்து பிலாட்டெர் ராஜினாமா செய்ய முக்கிய காரணமாக இருந்தது, கடந்த 2010ம் ஆண்டு தென்ஆப்ரிக்கா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக ஒப்புக் கொண்டதுதான்.
இது தொடர்பாக தென் ஆப்ரிக்க கால்பந்து சங்கம் எழுதிய ஒரு கடிதம்தான் தற்போது ஃபிஃபா தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்துள்ளது.
தென்ஆப்ரிக்கா வழங்கிய இந்த நிதி தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய தென்ஆப்ரிக்க கால்பந்து சங்கத் தலைவர் ஃபிபா செயலாளர் ஜெரோம் வால்கிக்கு எழுதிய கடிதத்தில் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்புக்கு உள்பட்ட பகுதிகளில் கால்பந்து வளர்ச்சிக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த தொகையை அந்த அமைப்புக்கு மாற்றி அனுப்பி விடுமாறும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த கடிதம் ஃபிபா பொதுச்செயலாளர் ஜெரோம் வால்கி பெயருக்கு எழுதப்பட்டிருப்பதால், அவருக்கு தெரியாமல் இந்த பணபரிவர்த்தனைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பப்படுகிறது.
எனினும் ஃபிபாவை பொறுத்த வரை, நிதிக்குழு தலைவரின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது.
இந்த பணவரிவர்த்தை நடந்த காலத்தில் ஃபிபா நிதிக்குழு தலைவராக இருந்தவர் ஜுலியோ கிரானாடா.
பிலாட்டெரின் நெருங்கிய நண்பரான இவர், பிலாட்டெர் போன்றே 26 ஆண்டு காலம் ஃபிபாவில் பல்வேறு பணிகளில் இருந்தவர்.
கடந்த 2014ம் ஆண்டு ஜுலியோ கிரானடோ இறந்து போய் விட்டது குறிப்பிடத்தக்கது.

ad

ad