புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சி உதயம்


* வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள சுமார் 15 இலட்சம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதே இலக்கு
* கட்சியின் தலைவர் : மனோகணேசன் பிரதித் தலைவர்கள்”: வி.இராதாகிருஷ்ணன், ப.திகாம்பரம்
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சுமார் 15 இலட்சம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நேற்று தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அரசியல் கட்சியொன்று உதயமானது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வில் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டு மேற்படி அரசியல் கட்சியைத் தொடங்கி வைத்தனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் அமைச்சர் ப. திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் அரசியல் தலைவர் இராஜாங்க அமைச்சர் வீ. இராதா கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்த அரசியல் தலைவர்கள் வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் 15 இலட்சம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஒலிக்கச் செய்து அவற்றுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் உழைக்கப்போவதாகவும் உறுதியளித் தனர்.
இது தேர்தலுக்காகக் கூட்டப்படும் கூட்டணியல்ல என சூளுரைத்த இத்தலை வர்கள், இது மக்கள் கூட்டணி. தமிழ் மக்களின் எதிர்ப்புக்களையும் அபிலாஷை களையும் நிறைவேற்றுவதே இக்கூட்ட ணியின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற 15 இலட்சம் தமிழ் மக்கள் இனியும் இலக்கற்றவர்களாக இருந்துவிட முடியாது என குறிப்பிட்ட அவர்கள் மேற்படி கூட்டணி ஐக்கிய இலங்கையில் சகல இன மத மக்களுடனும் இணைந்த தாக செயற்பாடுகளை முன்னெடுக்க விருப்பதாகவும் தெரிவித்தனர்.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று தெற்கில் தமிழ் முற்போக்கு கூட்டணி அமைந்து நாட்டை சீரழிக்க முற்படுகிறார்கள் என சில இனவாதிகள் கூற முற்படலாம். எனினும் இந்தக் கூட்டணி அனைவரோடும் இணைந்து ஜனநாயக ரீதியில் செயற்படும் கட்சியாகும். என்றும் அத்தலைவர்கள் தெரிவித்தனர்.
இக்கட்சியை சீர் குலைப்பதற்கு சில சக்திகள் சதியை மேற்கொண்டு வருகின்றன. எனினும் எவரும் இதனை அசைக்க முடியாது. இந்தக் கூட்டணி ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது பெரிய காரியம் என சிலர் இகழ்ச்சியான கூற்றுக்களை வெளியிடுகின்றனர். அவர்களுக்கு நாம் கூறுவதெல்லாம் இந்தக் கூட்டணி வெற்றிநடைபோடும் அதனைத் தடுக்க எவராலும் முடியாது என்பதே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கிய கொள்கை விளக்கம் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தோல்வியடைந்த சிலர் இனவாதம் பேசி அரசியல் செய்ய முற்படுகின்ற இவ்வேளையில் நாம் நிதானமாகச் செயற்படுதோடு அதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக மேல் மாகண சபையின் உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதித் தலைவராக அமைச்சர் பி.திகாம்பரமும், இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிருஷ்ணனும் நியமிக்கப்பட் டுள்ளதுடன் கூட்டணியின் பொதுச் செயலாளராக மலையக மக்கள் முன்ன ணியின் செயலாளர் லோரன்ஸ¤ம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்விமான்கள் புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆலோசனை சபையொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் அரவிந்த குமார், சண். குகவரதன், மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் குருசாமி, முன்னாள் பிரதியமைச்சர் புத்திர சிகாமணி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ad

ad