புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

ஜெயராஜ், தஸநாயக்கவை புலிகள் கொலை செய்யவில்லை! அஸாத் சாலி


முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மற்றும் த.மு. தஸநாயக்க ஆகியோரை விடுதலைப் புலிகள் படுகொலை செய்யவில்லை என்றும், வேறு தரப்பினரே புரிந்துள்ளனர் என்பதனை நிருபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் தமக்கு கிடைத்திருப்பதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மற்றும் த.மு. தஸநாயக்க ஆகியோரது படுகொலை தொடர்பில் புதிய ஆதாரங்களை தாம் பொலிஸ் மா அதிபரிடம் வழங்குவதாகவும் இதன் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விபரத்தை வெளியிட்டார்.
முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே த.மு. தஸநாயக்க ஆகியோரை விடுதலைப் புலிகள் இயக்கமே படுகொலை செய்ததென மஹிந்த அரசு குற்றஞ்சாட்டியிருந்தனர் எனச் சுட்டிக்காட்டிய போது, அதற்கு பதிலளித்த அஸாத் சாலி,
விடுதலைப் புலிகள் அந்தப் படுகொலைகளைப் புரியவில்லை என்றும் வேறு தரப்பினரே புரிந்துள்ளனர் என்பதனை நிருபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் தமக்கு கிடைத்திருப்பதாகவும் அவற்றையே பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அதன் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்துமாறு கோரவிருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார்.
எத்தகைய சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என வினவிய போது மிகவும் வலுவான சான்றுகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அஸாத் சாலி குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பு அமைச்சராக இருந்த போது அவரைப் படுகொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சிக்கப்பட்ட விடயத்தையும் இதன் போது அஸாத் சாலி சுட்டிக்காட்டினார்.

ad

ad