புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2015

கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 விடயங்களை உள்ளடக்குமாறு கோரிக்கை


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்
என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கு நேற்றய தினம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது 65 வருடகால அரசியல் இலக்கும் கோட்பாடுமான வட, கிழக்கு இணைந்த தாயகத்தில் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் சாசனத்தில் தமிழ்த் தேசிய இன மக்களுக்கு வழங்கப்படும் சுயநிர்ணய உரிமையுடன் கூடியதும், அதியுச்ச அதிகார பரவலாக்கத்துடன் கூடியதுமான தன்னாட்சியுடன் இணைப்பாட்சிக் கட்டமைப்பை அடைவதற்கான அரசியல் தீர்வை அடைவது,
அச்சுறுத்தல் காரணமாக குற்றங்களை நிர்ப்பந்தத்தின் பேரில் ஒப்புக் கொண்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளையும் நீண்டகாலமாக நீதிமன்ற வழக்குகளை காட்டி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளையும், எதுவித விசாரணைகளும் இன்றி இயற்கை நீதி மற்றும் மனித உரிமைகளை மீறும் வகையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளையும்,
விடுதலை செய்ய வேண்டும் என தேர்தலின் பின்பு உருவாகும் அரசாங்கத்தை வற்புறுத்தவும் இதற்கான சர்வதேச ஆதரவை கோரவும் நடவடிக்கை எடுத்தல்.
பொருளாதார வலயங்களை வட,கிழக்கில் உள்ள சகல மாவட்டங்களிலும் உருவாக்கி வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தல் ஆகிய 3 விடயங்களை குறிப்பிட்டு மேற்படி விடயங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டும் எனக் கோரியும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

ad

ad