புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2015

மைத்திரியை கட்சி தலைமையில் இருந்து நீக்க இரகசிய நடவடிக்கை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் அவசர யோசனை ஒன்றை முன்வைத்து கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைமைப் பதவியில் இருந்து நீக்கும் முயற்சி ஒன்று முன்னெடுக்கப்படுகிறது
இதற்கான ஆயத்தங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டவேண்டும் என்று  எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது கட்சியின் அங்கத்தவர்கள், ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டிய கட்சியின் செயலாளர்கள் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

எனவே மத்திய செயற்குழுவைக் கூட்டவேண்டும் என்று மைத்திரியிடம் கேட்டுக்கொண்டனர்.

இந்தநிலையில் மற்றும் ஒரு சிரேஸ்ட உறுப்பினர் குழு மைத்திரியை தலைமை பதவியில் இருந்து நீக்க மத்திய செயற்குழுவில் யோசனை ஒன்றை முன்வைக்க முயற்சிகளை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவராமல் வெறுமனே தலைவரை நீக்கமுடியாது என்று கட்சியின் சட்டப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ad

ad