புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2015

உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு: பக்ரிநாத் சென்ற பக்தர்கள் தவிப்பு

உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் பக்ரிநாத் சுற்றியுள்ள மலை பகுதிகளில் பலத்த மழையுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பக்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் யாத்திரை சென்ற பக்தர்கள் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். பக்தர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையினால் ரெஜோரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் அந்த மாநிலத்தில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

ad

ad