புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2015

“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி

“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான்
பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி
குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை வீரரின் இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல பல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த அந்தத் தமிழீழத் தனியரசைக் காணும் முன்பே போர்க் களத்தில் தங்கள் உயிர்களைக் காணிக்கையாக்கிக் கொண்டனர். இவர்கள் எதைக் கேட்டார்கள்?
உரிமைகள் மறுக்கப்பட்ட தங்கள் இனத்துக்காக விலங்கிலும் கேவலமாக நடத்தப்பட்ட தங்கள் மக்களுக்காக நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் விடுதலையையும் கேட்டார்கள்.
25-07-2983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு …
* தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்
* குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்
* ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்
* தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்
* சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்
* செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்
* அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும்செல்லதுரை ஜெயரெத்தினம்
* அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்
* ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்
* சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமார்
* சின்னதுரை அருந்தவராசா
* தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்
* மயில்வாகனம் சின்னையா
* சித்திரவேல் சிவானந்தராஜா
* கணபதிப்பிள்ளை மயில்வாகனம்
* தம்பு கந்தையா
* சின்னப்பு உதயசீலன்
* கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்
* கிருஷ்ணபிள்ளை நாகராஜா
* கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்
* அம்பலம் சுதாகரன்
* இராமலிங்கம் பாலச்சந்திரன்
* பசுபதி மகேந்திரன்
* கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்
* குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்
* மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்
* ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்
* ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்
* கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார்
* யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்
* அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்
* அந்தோணிப்பிள்ளை உதயகுமார்
* அழகராசா ராஜன்
* வேலுப்பிள்ளை சந்திரகுமார்
* சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் ஆகிய 35 தமிழர்களும் ….
இரண்டாம் நாள் (28-07.1983) படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு…
* தெய்வநாயகம் பாஸ்கரன்
* பொன்னம்பலம் தேவகுமார்
* பொன்னையா துரைராசா
* குத்துக்குமார் ஸ்ரீகுமார்
* அமிர்தநாயகம் பிலிப்குமாரகுலசிங்கம்
* செல்லச்சாமி குமார்
* கந்தசாமி சர்வேஸ்வரன்
* அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை
* சிவபாலம் நீதிராஜா
* ஞானமுத்து நவரத்தின சிங்கம்
* கந்தையா ராஜேந்திரம்
* டாக்டர் ராஜசுந்தரம்
* சோமசுந்தரம் மனோரஞ்சன்
* ஆறுமுகம் சேயோன்
* தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
* சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
* செல்லப்பா இராஜரட்னம்
* குமாரசாமி கணேசலிங்கன்
இனவெறி சிங்கள ஆதிக்க சக்தியின் இன அழிப்பு கோரவதாண்டவத்தில் படுகொலையான இவ் உறவுகளுக்கு எம் இதய அஞ்சலிகள

ad

ad