சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் கலை பண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் மீது கடந்த காலம் தொட்டு தொடர்ச்சியாக இற்றைவரை சிங்கள அரச பேரினவாதத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் இன அழிப்பின் சாட்சியாகக் கொண்ட இது இனப்படுகொலையா இல்லையா! என்ற ஆவணப்படத்தின் தொகுப்பு வெண்திரையில் காண்பிக்கப்பட்டதுடன், எழுச்சி நிகழ்வுகளாக கவிதை, எழுச்சிப்பாடல்கள், இளையோர்களின் இனஉணர்வு மிக்க எழுச்சி நடனங்கள், பேச்சுக்களுடன் கவியரங்கமும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.