புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2015

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு வாய்ப்பு கிடைக்காது


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரியவருகிறது.
பிரசன்ன ரணதுங்க மற்றும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை கோரியிருந்தாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனு குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
பிரசன்ன ரணதுங்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவரது சகோதரர்களான அர்ஜூன ரணதுங்க மற்றும் ருவான் ரணதுங்க ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதால், பிரசன்ன ரணதுங்கவுக்கு வாய்ப்பை வழங்குவது அநீதியானது என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பிரசன்ன ரணதுங்கவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குவதா இல்லையா என்று இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் பேசப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சியில் பங்கேற்ற பல மாகாண சபை உறுப்பினர்களுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது.

ad

ad