புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2015

2200 மில்லியன் ரூபா நிதித் திட்டத்தின் கீழ் இரணைமடு குளத்திற்கான கட்டுமான பணிகள் இன்று ஆரம்பம்
















வன்னியின் பிரதான குளமாக காணப்படும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுக்களை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையுடன் 2200மில்லியன் ரூபா நிதித் திட்டத்தின் கீழ் ஐந்து கட்டங்களாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுக்களை புனரமைக்கும் பணிகள் இன்று வடக்கு மகாண சபையின் விவசாய கால் நடை அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.
 வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று திங்கட்கிழமை (24.08.2015) சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை எடுத்து வருவதற்கு இணங்கினால் மாத்திரமே இரணைமடுக்குள அணைக்கட்டுத் திருத்த வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்ற நிபந்தனை முன்னர் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இரணைமடுக்குளத்திலிருந்து நீரை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வருவதற்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத்துக்கு இது பாரிய பாதிப்பை ஏற்படுத்துமென்று தொடர்ச்சியாக அவர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக ஆராய வடக்கு மாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவும், இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நீர் எடுத்து வரப்படின் கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயம் பாதிப்புக்கு ஆளாகும்  என்று சுட்டிக்காட்டியிருந்ததோடு,
யாழ் குடாநாட்டின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மாற்று யோசனைகளையும் முன்வைத்திருந்தது. இதனை, வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் கடன் வழங்குநரான ஆசிய அபிவிருத்தி வங்கியின்; உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துத் தெரியப்படுத்தி இருந்தனர்.
இதையடுத்து, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இரணைமடுக்குளத்தைப் புனரமைப்பதற்குரிய நிதியை இலகு கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்தது. 
இரணைமடுக்குள அணைக்கட்டைப் புனரமைத்து கிளிநொச்சி மாவட்டத்துக்கான நீர்ப்பாசனத்தை விரிவுபடுத்தும் திட்டம் 5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இவற்றை நிறைவேற்றுவதற்கென 2120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 458 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள அணைக்கட்டின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியை வடக்கு விவசாய அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன்,
வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சண்முகானந்தன் உட்பட பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகளும், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தார்கள். 
தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் எமது தேசியத்தை அடகு வைக்க நாம் ஒருபோதும் தயாராக இல்லை! ஐங்கரநேசன்
தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் எமது தேசியத்தை அடகு வைக்க நாம் ஒரு போதும் தயாராக இல்லை என வடக்கு மாகாண சபையின் விவசாய கால் நடை அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்,
இப்பொழுதும் இங்கு தென்னிலங்கை அரசாங்கத்தால் எமது அடையாளங்களை அழிப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் கூட விவசாயத் திணைக்களம் தொடர்பான நியமனம் ஒன்று மிகவும் இரகசியமாக எமது பிரதேசங்களில் செய்யப்பட்டு பெரும்பாலான வீதம் சிங்கள மக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இது மிகவும் ஆபத்தான செயல். தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் எமது தேசியத்தை அடகு வைக்க நாம் ஒரு போதும் தயாராக இல்லை என்றார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றிய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
இரணைமடுக் குளத்தின் புதியதொரு முக்கியமான வேலைத்திட்டம் இன்று கடந்த காலங்களில் பல சவால்களை தாண்டி நடைமுறைக்கு வருகின்றது.
இந்த வேலை நிறைவுற்று செயல்முறைக்கு வரும்பொழுது இரணைமடு தொடர்பாக சிலருக்கு இருக்கும் குழப்பங்கள் இயல்பாக தீருகின்ற வாய்ப்பு வரும்.
கடந்த காலங்களில் இரணைமடு தண்ணீர் பிரச்சினையை தங்கள் சுயலாபங்களுக்காக பயன்படுத்தி மக்களுக்கு தவறான கருத்துக்களை விதைத்தவர்களுக்கு இம்முறை தேர்தலில் மக்கள் நியாயமான பதிலை தந்துள்ளார்கள்.
யாழ்ப்பாண மக்கள் இது விடயம் தொடர்பாக மிகவும் தெளிவான சிந்தனையுடன் செயல்படுகின்றார்கள் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று பின்னர் இரணைமடு அணைக்கட்டில் வேலைகள் விருந்தினர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா, வடக்கு மகாண பிரதம செயலாளர் பத்திநாதர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்.
மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் வடக்கு மகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், உயர் அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் சுதாகரன், நீர்ப்பாசன மற்றும் விவசாய திணைக்களங்களின் தலைவர்கள் விவசாய பெருமக்களின் பிரதிநிதிகள் திட்டப்பணிப்பாளர்கள் என இரணைமடு நலன் விரும்பிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்னர்.

ad

ad