புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2015

கூட்டமைப்பில் சேர்ந்ததனால் ப்ளோட்டுக்கு நிகர லாபம் போலும் மூன்றாவது பா. உ. ம் கிடைத்துள்ளது

TNA யின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரெட்ணசிங்கம் தெரிவு:
:
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள கிடைத்துள்ள நிலையில்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள், விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட திரு. க. துரைரெட்ணசிங்கம் அவர்களும் தேசியப் பட்டியலுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெண் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை நிர்வாக சேவையசை் சேர்ந்தவர்... உதவி திட்டமிடல் பணிப்பாளரான இவர். 1980களில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் புளொட் அமைப்பின் தொழற்சங்கப் பொறுப்பாளராக இருந்த வரதன் என்ற சிறீஸ்காந்தராஜாவின் மனைவியும் ஆவார்

ad

ad