புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2015

தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுங்கள் : கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கும் த.வி.கூ


தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி. தமிழர் விடுதலைக் கூட்டணியிச் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு,
 
 தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கின்றது. இந்த வேண்டுகோள் 60 ஆண்டுகளுக்குமேல் அரசியலில் பணிசெய்துகொண்டு இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் உலகில் எவரிலும் பார்க்க கூடுதலாக நேசிக்கும் ஒருவரிடம் இருந்து வருகின்றது என்பது உங்களுக்கு தெரியாததல்ல. 
 
குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர மற்றும் அனைவரும் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்ததோடு மட்டுமல்லாமல் பல உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து எல்லாவற்றிற்கும் மேலாக பல ஆண்டுகள் மனவேதனையுடன் வாழ்ந்தவர்கள்.
 
 இப்போது ஓர் அமைதியான புரட்சி ஏற்பட்டு எமது பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக் கூடிய ஒரு அரியவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு பல்வேறு பிரச்சினைகள் உண்டு. ஆனால் அவற்றை எல்லாம் ஒரேநாளில் அல்லது சிலநாட்களில் கூட தீர்த்துவிடமுடியாது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து இரு ஆண்டுகள் நடத்த உள்ள தேசிய அரசாங்கத்தில் நிச்சயமாக பலவற்றிற்குத் தீர்வுகாணமுடியும். 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விரைவாக ஓர் முடிவை எடுத்து தேசிய அரசாங்கத்தில் இணையவேண்டும். அதைத்தான் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். அதற்காகவே அவர்கள் வாக்குகளையும் அளித்துள்ளனர். 
 
பலவிதமானகொள்கைகளைக் கொண்டுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் இணைந்தே இவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளமையால் இந்த விடயத்தை மிகக் கவனமாகக் கையாளவேண்டிய கடப்பாடு உங்களுக்கு உண்டு. 
 
ஆரம்பத்தில் இருந்தே மதுளுவாவே சோபிததேரர் ஒமல்பே சோபிததேரர் அத்துரலிய ரத்தின தேரர் போன்ற சமயப் பெரியார்களும்இ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்ற அரசியல் பிரமுகர்களும் தாம் இனப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்புடைய தீர்வை பெற்றுத்தருவதாக மீண்டும் மீண்டும் உத்தரவாதம் அளித்துள்ளனர். 
 
நீங்கள் அவர்களை நம்பவேண்டும் என்பதும் தேசிய அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்பதே இந்தச் சந்தர்ப்பத்தில் எனது ஆலோசனையாகும். எல்லாவற்றிற்கும் மேலாக அரை நூற்றாண்டுகாலத்திற்கு மேலாகத் தீர்வுகாணமுடியாதிருந்த இனப்பிரச்சினைக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் தீர்வுகாணக்கூடிய ஒரு வாய்ப்பை நழுவவிடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=813594219124717214#sthash.pqDvYEZl.dpuf

ad

ad