புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2015

பொதுத்தேர்தலில் 5 இலட்சம் வாக்குகள் வரை நிராகரிப்பு- விருப்பு வாக்குகளே காரணம்.


நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் சுமார் 5 இலட்சம் வாக்காளர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன
வேட்பாளர்கள் தொடர்பான நீண்ட வாக்காளர் அட்டை தொடர்பில் தெளிவின்மையே இந்த நிராகரிப்புக்காக காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 4.42 வீதம் அதாவது 517,123 வாக்குகளே நிராகரிக்கப்பட்டுள்ளன
தேர்தலில் வாக்களிக்க 15மில்லியன் வாக்களார்கள் பதிவுப்பெற்றிருந்தபோதும் 3.3மில்லியின் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.
அத்துடன் வேட்பாளர்களின் விருப்புத்தெரிவு தொடர்பில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளும் வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன
கம்பஹாவில் மாத்திரம் 56ஆயிரத்து 246 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன
இதற்கு சுமார் 2மீற்றர் நீண்ட வாக்காளர் பட்டியலே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர்ää கட்சிக்கான வாக்குகளை உரியமுறையில் செலுத்தியபோதும் விருப்புத்தெரிவின்போதே பிழையான அடையாளங்களை இட்டுள்ளனர்
பலர்.வேண்டுமென்றே வாக்குகளை நிராகரித்துள்ளனர்.
கொழும்பில் மாத்திரம் 43ஆயிரத்து 372 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அங்கும் விருப்பு வாக்குகளே பிரதான காரணமாக அமைந்திருந்தன.

ad

ad