எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஜோன் செனவிரட்ன இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான பரிந்துரை அறிக்கையை தாம்ää கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ளார்.
அதில் கட்சியின் முழு அதிகாரமும் கொண்டவர் என்ற அடிப்படையில் மைத்திரிபால இது தொடர்பில் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே எதிர்க்கட்சிக்கான தகுதி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்