புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2015

நாடாளுமன்ற உறுப்புரிமையை எந்தவொரு பௌத்த பிக்குவும் பெற்றுக்கொள்ளவில்லை


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 150 பௌத்த பிக்குகளில் ஒருவரும் நாடாளுமன்றிற்கு தெரிவாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்
போது பல்வேறு கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் ஊடாக சுமார் 150 பௌத்த பிக்குகள் போட்டியிட்டனர். எனினும், நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் அளவிற்கான வாக்குகளை எந்தவொரு பௌத்த பிக்குவும் பெற்றுக்கொள்ளவில்லை.
பொதுபல சேனா அமைப்பு இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன என்னும் பெயரில் போட்டியிட்டது. குறைந்தபட்சம் பத்து ஆசனங்களை வெற்றிகொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தது. எவ்வாறெனினும், மிகவும் சொற்ப அளவிலான வாக்குகளையே நாடு முழுவதிலும் பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் மற்றும் அதுரலிய ரதன தேரர் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளனர். எனினும், இவர்களுக்கு தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு தேசியப்பட்டியல் ஊடாக சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் புதிய நாடாளுமன்றில் ஒரு பௌத்த பிக்குவும் அங்கம் வகிக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ad

ad