புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2015

தேசிய அரசாங்கம் அமைக்கப்படும்; மக்களுக்கு சேவையாற்ற அனைவரும் இணைய வேண்டும்: ரணில் விசேட உரை!


நடைபெற்று முடிந்த தேர்தலைத் தொடர்ந்து இந்த நாட்டில் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று புதன்கிழமை அலரி மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த உரையில் அவர் மேலும் குறிப்பிடுகியல்,
‘கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டில் ஏற்பட்ட புரட்சியை மக்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பதவியேற்றதன் பின்னர் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றோம். இதன்போது இணக்கப்பாடுகளுடன் கூடிய கூட்டு தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படும்.
மதத் தலைவர்கள், சிவில் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி எதிர்வரும் 5 அல்லது 2 ஆண்டுகளில் நாட்டின் பிரதான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக தேசிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதனூடாக கொள்கைத்திட்டம் ஒன்றை வகுத்து கொள்வோம்.
அதற்காக சமரசத்துடன் இணைந்து கொள்ளுமாறு சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அதனை புறக்கணிப்பது மக்கள் வழங்கிய ஆணையை புறக்கணிப்பது போன்றாகும்.

மக்களுக்கு சேவையாற்றுவதற்கான இந்த முயற்சியிலிருந்து எவரும் விலகிச் செல்ல முடியாது.’ என்றும் கூறினார்

ad

ad