புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2015

கோத்தபாய மற்றும் பசிலின் ஆலோசனையை ஒதுக்கி தள்ளினார் மகிந்த!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக பரவிய வதந்தி காரணமாகவே அவர் உடனடியாக தனது கையெழுத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
எனினும் மகிந்த ராஜபக்ச, அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க வேண்டும் என கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விமல் வீரவன்ஸ மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலையீடே மகிந்த ராஜபக்சவை அவசர அறிக்கையை வெளியிடச் செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத்தினர் கூறுவதை ஓதுக்கி விட்டு விமல் வீரவன்ஸ போன்றவர்களுடன் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு செல்வது என மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்

ad

ad