புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2015

தேசிய அரசாங்கம் அமைக்க சம்பிக்க எதிர்ப்பு! டளஸ் கடைசி நேரத்தில் ஆதரவு


சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனைக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான சம்பிக்க ரணவக்க, கடந்த நல்லாடசி அரசாங்கத்தில் எரிபொருள் மின்சக்தி அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ள அவர், ஆளுங்கட்சிக்குள் இருந்து கொண்டே தேசிய அரசாங்க யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே இன்று காலை வரை தேசிய அரசாங்கம் அமைப்பதை கடுமையாக எதிர்த்து வந்த சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் டளஸ் அலஹப் பெரும தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். எனினும் விமல் வீரவங்ச தரப்பினர் கடைசி வரை தமது எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
தேசிய அரசாங்கம் என்ற கருதுகோளுக்கு ஆளும், எதிர்த்தரப்புகளிடமிருந்து வரும் எதிர்ப்புகளை கருத்திற் கொண்டு ஒன்றிணைந்த அல்லது இணக்கப்பாட்டு அரசாங்கம் என்ற பதத்தைப் பயன்படுத்துவது தொடர்பிலும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

ad

ad