புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2015

தமிழகத்தில் ஊரகச் சாலைகளை மேம்படுத்த நடப்பாண்டில், 1,475 கோடி ரூபாய் ,,ஜெயலலிதா,

தமிழகத்தில் ஊரகச்  சாலைகளை மேம்படுத்த நடப்பாண்டில், 1,475 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில்,  விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த ஜெயலலிதா, 

தமிழகத்தில், 4,000 கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்த 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். சாலைகள் மற்றும் மேம்பாலங்களை பராமரிக்க 200 கோடி ரூபாயும், ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலங்களுக்கான சாலைகளை பராமரிக்க 365 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.

மேலும் அவர், கிராமப் புறங்களில், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை விரைந்து வழங்க, 660 கோடியே 30  லட்சம் ரூபாய் செலவில் 3,890 சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அறிவித்தார். மேலும், 2,000 கிராம ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், பசுமை தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், ஊராட்சி பகுதிகளில் 300 கோடி ரூபாய் செலவில் 8 லட்சம் எல்இடி விளக்குகள் நடப்பாண்டில் பொருத்தப்படும் என்று அறிவித்தார்.

நடப்பாண்டில், ஆதரவற்றோர், ஏழைகள் மற்றும் நலிவுற்றோரைக் கொண்டு 10,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் புதிதாக அமைக்கப்படும் என்று முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அறிவித்தார். மேலும், 30 ஆயிரம் இளைஞர்களுக்கு புது வாழ்வு திட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாக 30 கோடி ரூபாய் செலவில் திறன் வளர்ப்பு பயிற்சிகளின் வாயிலாக நிலையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்  என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டார். 

ad

ad