சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிவிட்டது திமுக. வலிமையான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க அக்கட்சி தலைமை விரும்புகின்றபோதிலும்,
கூட்டணிக்குள் சேர்க்கும் கட்சிகள், அதிக இடங்களை கேட்காமல் 'செக்' வைக்கும் காய் நகர்த்தல்களை சாமர்த்தியமாக தொடங்கிவிட்டது. ஏற்கனவே கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நீதிகேட்கும் பேரணி, 234 தொகுதிகளிலும் பொதுமக்களை நேரடியாகச் சந்திக்கும் கூட்டங்கள் என்று ஒருபுறம் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே போல கனிமொழி எம்.பி. தலைமையில் மதுஒழிப்பு மாநாடு, மரண தண்டனை ஒழிப்புக் குறித்த தனிநபர் மசோதா கொண்டுவருதல் என்று அவரையும் களத்தில் இறக்கி விட்டுள்ளது திமுக தலைமை.
அதன்படி கனிமொழியும் தன் பங்கிற்கு மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் போராட்டம், பொதுக்கூட்டம் என்று பரபரப்பாக இருக்கிறார்.
அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் தெம்பில், வரும் தேர்தலிலும் வென்று மீண்டும் ஆட்சியில்
அமரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். அதற்கான தேர்தல் வேலைகளை, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆனதுமே தொடங்கிவிட்டார் ஜெயலலிதா. மாவட்டம் தோறும் அதிமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தவும், வாக்காளர்களை நேரடியாக கட்சி பிரதநிதிகள் சந்திக்கவும் உத்தரவுகள் பறந்து, அதன்படி அதிமுகவினர் சுறுசுறுப்பாகியுள்ளனர்.
இன்னொருபக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக,விசிக, மமக, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள், 'மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம்' என்ற பெயரில் போராட்டங்கள், கண்டன கூட்டங்கள் நடத்தி, தங்களின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதேபோல பாமக, 'திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை, எங்கள் தலைமையை ஏற்பவர்களுடன்தான் கூட்டணி' என்று அறிவித்தும், முதல்வர் வேட்பாளராக அன்புமணியை களத்தில் இறக்கியும் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.
ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோ, கூட்டணி குறித்தோ,சட்டமன்ற தேர்தல் குறித்தோ இறுதியான முடிவுகளை அறிவிக்காமல் உறுப்பினர்கள் சேர்க்கை, தொண்டர்கள் சந்திப்பு என்றும், அவ்வப்போது மக்கள் பிரச்னைகள் அடிப்படையிலான போராட்டங்கள் என்றும் அடக்கமாக இயங்கிவருகிறது.
அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் தெம்பில், வரும் தேர்தலிலும் வென்று மீண்டும் ஆட்சியில்
இன்னொருபக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக,விசிக, மமக, காந்திய மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள், 'மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம்' என்ற பெயரில் போராட்டங்கள், கண்டன கூட்டங்கள் நடத்தி, தங்களின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதேபோல பாமக, 'திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை, எங்கள் தலைமையை ஏற்பவர்களுடன்தான் கூட்டணி' என்று அறிவித்தும், முதல்வர் வேட்பாளராக அன்புமணியை களத்தில் இறக்கியும் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.
ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோ, கூட்டணி குறித்தோ,சட்டமன்ற தேர்தல் குறித்தோ இறுதியான முடிவுகளை அறிவிக்காமல் உறுப்பினர்கள் சேர்க்கை, தொண்டர்கள் சந்திப்பு என்றும், அவ்வப்போது மக்கள் பிரச்னைகள் அடிப்படையிலான போராட்டங்கள் என்றும் அடக்கமாக இயங்கிவருகிறது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான விஜயகாந்தின் தேமுதிக, கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. அதிமுக உடன் கூட்டணி கிடையாது என்பதுமட்டும்தான் உறுதியாக தெரிகிறது. திமுக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அவ்வப்போது அக்கட்சி கூறி வருகிறபோதிலும் திமுக, காங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,விடுதலைச் சிறுத்தைகள்,மதிமுக,பாஜக,இந்திய ஜனநாயகக் கட்சி,புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சித் தலைமைகளோடு நல்ல நட்பில் இருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அதே போல மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, அதிமுகவோடு ஒட்டிக்கொண்டு தமிழகத்தில் இயங்குவதா அல்லது தனது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதா, இல்லை தனியாக களம் இறங்கி அரசியல் செய்யலாமா என்று தவிப்பில் இருக்கிறது.
ஒருவாறாக தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்படுவதை காணமுடிகிறது. இந்நிலையில்தான் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், இன்று வெளியான ஆங்கில ஏடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 இடங்களில், 170 இடங்களில் திமுக போட்டியிடும் என்றும், பாமக, விசிக கட்சிகளுக்கு கூட்டணியில் இடமில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகளே அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
அவரது இந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், இளங்கோவன் கூறியதற்கும், கட்சிக்கும் தொடர்பில்லை என்று திமுக தலைமைக்கழக அறிவிப்பு வெளியாகி, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், " திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்
அவர் பெயரில், அந்தப் பத்திரிகையில் வந்துள்ள செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சம்மந்தமே இல்லை. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் தலைமைக் கழகத்திலே உள்ளவர்கள் பேட்டி அளிப்பதும், செய்திகளைக் கொடுப்பதும் ஏற்கத்தக்கதல்ல. கழகத்தைப் பற்றி அந்த ஏட்டில் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் தவறானவை என்பதால், கழகத் தோழர்கள் யாரும் அதனை நம்ப வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
டி.கே.எஸ்.இளங்கோவனை பொறுத்தவரையில் கூட்டணி போன்ற முக்கியமான விஷயங்களில், தலைமைக்குத் தெரியாமல் பேட்டிகள் கொடுப்பது வழக்கமில்லை என்றே கூறப்படுகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கைத் தயாரிக்கும் குழுவில் இருக்கும் இளங்கோவன், எப்போதும் தலைமையோடு நெருக்கமாக இருக்கும் நிலையில் இருப்பவர்.அதனால் அவர் கூறுவது தலைமையே கூறுவது போலத்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
மேலும் கட்சிக்கு சம்பந்தமில்லாமல் திமுக தலைமைக் கழகத்தின் செயலாளர் எப்படி பேசிவிடமுடியும்? அவ்வாறு நடந்துகொண்டால் அவர்மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுப்பதுதானே திமுகவின் வழக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த விசயத்தில் தலைமைக் கழகம் விளக்கம் கொடுப்பதோடு நிற்கிறது என்றால், இது திமுக ஆடும் அரசியல் சித்து விளையாட்டு அல்லாமல் வேறு என்ன? என்று கேட்கிறார்கள் திமுக தலைமையை நன்கறிந்த அரசியல் நோக்கர்கள்.
ஆக மொத்தம் சட்டசபை தேர்தலுக்கான அரசியல் ஆட்டத்தை தொடங்கிவைத்து விட்டது திமுக. அடுத்து எந்த கட்சி ஆட்டத்தை தொடங்கப்போகிறது என்பதுதான் தமிழக அரசியல் வட்டாரத்தில் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது