புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2015

ஆ.ராசா, கேரள கவர்னர் சதாசிவம் உள்பட 31 வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு வாபஸ்

 

2 ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு அளிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.  தமிழகத்தை சேர்ந்த பி.சதாசிவம் தற்போது கேரளாவில் கவர்னராக உள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அந்த மாநில பாதுகாப்பு வழங்கப்படுவதால் மத்திய பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாருக்கு அளிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டேவுக்கும் அவரது குடும்பத்தில் 8 பேருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. சுஷில்குமார் ஷிண்டே, அவரது மனைவி உஜ்வாலா, மகள்கள் பிரணிதி, ஸ்ம்ருதி, மருமகன் ராஜ்ஸ்ரூப், 2 பேத்திகள், 2 பேரன்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது.

தெலுங்கானா முதல்– மந்திரி சந்திரசேகரராவுக்கு மாநில பாதுகாப்பு வழங்கப்படுவதால் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.  மேலும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் ஜென், எஸ்.கே.சின்கா, கே.ஜி.பாலகிருஷ்ணன், உத்ரகாண்ட் கவர்னர் கே.கே.பால், முன்னாள் மத்திய மந்திரிகள் சுபோத்காந்த் சகாய், வி.நாராணசாமி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் முதன்மை செயலாளர் ஜித்தன் பிரசதா, முன்னாள் எம்.பி. டி.கே.ஏ.நாயர், தொழில் அதிபர் நவீன் ஜிந்தால், அப்துல் ரஹீத் ஷகின், ஆர்.கே.தவான், டெல்லி முன்னாள் கவர்னர் தேஜேந்திர கண்ணா, கோபால் சுப்பிரமணியம் உள்பட 31 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ad

ad