புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2015

முன்னாள் தலைவரின் மகனின் வெளிநாட்டு வங்கி கணக்கில் 500 மில்லியன் டொலர்?


நாட்டின் பிரபல தலைவராக செயற்பட்ட ஒருவரின் மகனான இளம் அரசியல்வாதி மேற்கு ஆபிரிக்கா நாட்டில் நடத்தி செல்லும் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட 500 லொடர் மில்லியன் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அக் கணக்கின் கொடுக்கல் வாங்கல்களை தடை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அந்நாட்டு நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவுக்கான தீர்ப்பு இன்று கிடைக்கவுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கு தீவிரமாக சட்டத்தை செயற்படுத்தும் குறித்த நாட்டு முஸ்லிம் அரசாங்க நீதிமன்றத்திற்கு இக் கணக்கினை தடை செய்தற்காக இப் பணம் ஊழல் மற்றும் மோசடியான முறையில் சம்பாதித்ததாக தகவல் வழங்கப்படுவது கட்டாயமாகும்.
அதற்கு அவசியமான தகவல்கள் இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளாது.
குறித்த செயற்பாடு தோல்வியடைந்து விட்டால் வேறு முறையினை பயன்படுத்துவதற்கு இடமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆங்கில செய்தி பத்திரிகை குறிப்பிடுகின்றமைக்கமைய இக் கணக்கு குறித்து கண்டுபிடித்த சந்தர்ப்பத்தில் 1000 மில்லியன் டொலருக்கும் அதிக பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அப் பணத்தின் ஒரு பகுதி தற்போது வரையில் கிழக்கு ஐரோப்பிய நாட்டு வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இப் பணத்தை கண்டுபிடிப்பது சிக்கலான ஒரு விடயமாகும் என குறித்த ஆங்கில பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

ad

ad