புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2015

''என் அம்மாவுக்கு எனது பிரியா விடை!'' -கமல்ஹாசன் உருக்கம்

டிகை மனோரமா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், நடிகை மனோரமா தமிழ்
சினிமாவின் நகைச்சுவைக்கு தாய் போன்றவர் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஒரு வாரம் முன்பு அவரைச் சந்தித்தேன். நாங்கள் மூத்த சினிமா பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் விழா நடத்திக் கொண்டிருந்தோம்.அப்போது அனைவரும் ஆச்சரியத்தக்க வகையில் மனோரமா விழா மேடைக்கு வருகை தந்தார், பிறகு பார்வையாளர்கள் அனுமதியுடன் 65 ஆண்டுகளுக்கு முன்பாக கருணாநிதி அவர்கள் எழுதிய 3 பக்க வசனத்தை தனது நினைவிலிருந்து பேசினார்.

இதனை அவர் எதற்கு செய்து காட்டினார் என்றால் இப்பவும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் அவர் நடித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகள் நடிக்க முடியாமல் போனது அவரை மிகவும் பாதித்திருந்தது. அன்றைய தினம் அந்த 3 பக்க வசனத்தை அவர் பேசி முடித்தவுடன் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது. 

குழந்தை நடிகர் என்ற நிலையிலிருந்து அவர் என்னை அறிந்தவர். பிறரை நேசிக்க கூடிய பெண்மணி, திறமைசாலி. தமிழ்த் திரைப்பட நகைச்சுவைக்கு மனோரமா, நாகேஷ் ஆகியோர் தாயும், தந்தையும் போன்றவர்கள். முதுகுக்குப் பின்னால் என்னை விமர்சிப்பவர்களிடத்தில் எனக்காக அவர் பரிவாக பேசியுள்ளார்.  அவரது ரசிகர்களில் ஒருவனாக நானும் அவரை இழந்துள்ளேன். மனோரமா அவர்களுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன்.

அவருடைய வாழ்க்கை முழுமையானது, ஆனாலும் அவரது ரசிகர்களான எங்களுக்கு இன்னமும் ஏதோ பூர்த்தியடையாதது போலவே உள்ளது.உங்களது கூர்மையான நகைச்சுவையால் எங்கள் முகங்களில் சிரிப்பை வரவழைத்த உங்களுக்கு நன்றி அம்மா. எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட சந்தோஷகரமான துக்கக்கரமான அனைத்து தருணங்களுக்கு நன்றி.  அன்பும், வேடிக்கையுமான என் அம்மாவுக்கு எனது பிரியாவிடை."

இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ad

ad