புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2015

குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களுக்கு உதவிடும் திட்டம்

நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டும் வகையில் குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கட்டியயழுப் புவதற்காக
ஒரு புதிய நிகழ்ச்சித்திட்டத்தை அரசு ஆரம்பிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்த நாட்டில் அப்பாவி மக்களின் நலன்களைச் சுரண்டுவதற்கு, அரசயல்வாதிகளுக்கு ஒருபோதும் தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.சுகததாச உள்ளக அரங்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அரச சேவை முகாமைத்துவ உதவியா ளர்கள் 2,700 பேருக்கு நிய மனங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கை யில், 
குறைந்த வருமானம் பெறும் குடும் பங்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக மேற்கொள் ளப்படும் நலனோம்புகை முறைமை களில் குறைபாடுகள்  உள்ளன. அந்தக் குறைபாடுகளை நான் அமைச்சர் களுடன் கலந்துரையாடிச் சரி செய்ய வுள்ளேன். தங்களிடம் சேவைகளை நாடிவரும் மக்களுக்கு வினைத் திறன்மிக்க சேவைகளை வழங்கு வது அரச அதிகாரிகளின் பொறுப் பாகும். 
இலங்கையில் அரச சேவையை ஊழல், மோசடி, வீண்விரயம் இல் லாத ஒரு சேவையாகக் கட்டியய ழுப்புவதற்குப் புதிய அரசு அர்ப் பணிப்போடு உள்ளது.மக்களுக்காக அவர்களது நலனோம் புகை நடவடிக்கைகளுக்கு அரசு ஒதுக்கும் ஒவ்வொரு சதத்தையும் முதலீடு செய்யும் வகையில் ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.2014-2015ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு மூன்று வாரப்பயிற்சியின் பின்னர் அரச சேவை முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனங்கள் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
அரச முகாமைத்துவ சேவைக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய மேலும் 1,061 பேர் அதிகாரிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அந்த வகையில். பல்வேறு அமைச்சுகள் திணைக்களங்களில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான 80 வீத வெற்றிடங்கள் இதன்மூலம் நிரப்பப்படவுள்ளன. அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 
                                                         

ad

ad