புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2015

மனோரமாவின் உடலுக்கு ஜெயலலிதா நேரில் சென்று அஞ்சலி



பழம்பெரும் நடிகையான மனோரமா நேற்றிரவு உடல் நலக்குறைவால் காலமானார். தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில்
மனோரமா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுதாவூரில் இருந்து இன்று பிற்பகலில் சென்னை வந்த முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் தி.நகர் சென்றார். அங்கு மனோரமாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, "மனோரமா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எனக்கும், மனோரமாவுக்கும் இருந்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது. திரையுலகில் எனது மூத்த சகோதரியாக விளங்கியவர் மனோரமா. நடிப்பில் மேதையான மனோரமாவை பெண் நடிகர் திலகம் என்றே சொல்லலாம். எம்ஜிஆர், சிவாஜியின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் மனோரமா. தமிழ் திரையுலகில் மனோரமாவை போன்ற சாதனையாளர் இருந்ததில்லை" என்றார்.மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு ஜெயலலிதா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி,
அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது மூத்த சகோதரி மனோரமா, இயற்கை எய்திவிட்டார் என்று அறிந்ததும், எனக்கு ஏற்பட்ட துக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. திரைப்படத் துறையில் அவர் எனது மூத்த சகோதரி ஆவார். ஏராளமான திரைப்படங்களில் அவரும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம். 

மனோரமாவைப் போல், ஒரு சாதனையாளர் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்பு எவரும் இருந்ததில்லை. இனி எவரும் பிறக்கப்போவதும் இல்லை. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இனி எந்தக் காலத்திலும் யாராலும் நிரப்ப முடியாது. அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் களைப்பாற வேண்டும். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad