புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2015

தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதம்

கைதிகளின் தீர்மானம் குறித்து எதுவும் தெரியாது - சிறைச்சாலைகள் ஆணையர்
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும்
தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் நாடெங்கிலு முள்ள சிறைச்சாலைகளில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
தம்மை விடுதலை செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில், தாம் விடுதலை செய்யப்படும்வரை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்தபோதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவ்வப்போது கதைக்கப்படுகின்றபோதும், தமது விவகாரம் வெறுமனே அறிக்கைகளிலும், ஊடகங்களிலும் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு எதுவித ஆக்கபூர்வமான
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிடுகின்றனர். தமது விடுதலையானது இனவாத ரீதியாகவும், பழிவாங்கும் நடவடிக்கையுமாகவே பார்க்கப்படுகிறது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிப்பதற்கு அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்.
இதனை வலியுறுத்தி வெலிக்கடை, திருகோணமலை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட சகல சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முதல் ஆரம்பிக்கின்றனர்.
ஜெனீவா பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற சமயம் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தபோதும் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் நெருக் கடிகொடுக்காமல் அக்காலத்தில் ஆர்ப்பாட்டத்தை தாம் தவிர்த்திருந்ததாகவும், இருந்தபோதும் அரசாங்கத்திடமிருந்து எதுவித சமிக்ஞையும் வெளியிடப்படாத நிலையில் உண்ணாவிரதத்தை ஆரம் பிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர்.
நீண்டகாலமாக தாம் சிறைச்சாலைகளில் தடுத்தவைக்கப்பட்டிருப்பதால் தமது குடும்பங்கள் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகள் காணப்படு கின்றன. எனினும் சட்டமா அதிபர் திணைக்களம் தமது விடயத்தில் தொடர்ந்தும் பாராமுகம் காட்டிவருவதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர்.
விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பலதரப்பட்ட அரசியல்வாதிகளும் உறுதிமொழிகளை வழங்கியபோதும் தொடர்ந்தும் பொறுத்திருக்க முடியாததால், விடுத லைக்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் தாம் குதித்திருப்பதாக அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிறைச்சாலைகள் ஆணையாளர்
தமிழ் அரசியல் கைதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் குறித்து நான் அறிந்திருக்கவில்லையென சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தினகரனுக்குத் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவதில் முக்கியத்துவமளிக்கும் சிறைக் கைதிகள் ஏனோ சிறைச்சாலையுடன் நெருங்கிய தொடர்பு கொடுடிருக்கும் எமக்கு அது குறித்து அறியத்தர முன்வருவதில்லை” எனவும் அவர் கூறினார்.
“சிறைச்சாலைக்கு அரசியல் தலைவர்கள் விஜயம் செய்தபோது மேற்படி கைதிகள் தம்மை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன் வைத்திருந்ததனை நான் அறிவேன். ஆனால் இத்திடீர் உண்ணாவிரத போராட் டம் குறித்து நான் எதுவும் அறிந்து வைத்தி ருக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
சிறைக்கைதிகள் விரும்பினால் உணவு உண்பதை நிராகரிக்க முடியும். அது சிறைச்சாலையின் செயற்பாடுகளுக்கு குத்தகம் ஏற்படுத்தாது என்ற போதும் ஆணையாளர் என்ற வகையில் சிறைச் சாலை நடைமுறைகளுக்கமைய போராட்டத்தை முன்னெடுப்பவர்களிடம் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டினை எட்டுவதற்கு எத்தனிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad