புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2015

60 அரசியல் கைதிகளுக்கு நவ.7க்கு முன் பொதுமன்னிப்பு! நீதியமைச்சர் உறுதி


அடுத்த மாதம் 7ஆம் திகதிக்குள் அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
அத்துடன் பத்து அரச சட்டத்தரணிகள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு இந்த விவகாரம் தொடர்பில் ஆராயப்படும் என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தமது வாக்குறுதியை நிறைவேற்ற காலஅவகாசம் அளிக்கும் வகையில் தமது போராட்டத்தை வரும் 7ம் திகதி வரை இடைநிறுத்த அரசியல் கைதிகள் தீர்மானித்தனர்.
இந்த நிலையில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டு நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் குறைந்தது 60 தமிழ் அரசியல் கைதிகள் நவம்பர் 7 ம் திகதிக்கு முன்னர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படுவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் துரிதப்படுத்தப்படவுள்ளன.
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத அரசியல் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சாத்தியப்பாடுகள் குறித்தும் அரச தரப்பில் ஆராயப்படுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் குறிப்பிட்ட கால புனர்வாழ்வுக்கு அனுப்பப்படும் சாத்தியங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
சுமார் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கைதிகள் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகமான சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

ad

ad