புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2015

உலகின் முதல் பணமில்லா நாடாகிறது ஸ்வீடன்

உலகின் முதல் பணமில்லாத நாடு என்ற பெருமையைப் பெறுகிறது ஐரோப்பாவின் முக்கிய நாடான ஸ்வீடன்.
ஸ்கான்டிநேவிய தீபகற்பத்தின் முக்கிய, பெரிய நாடு ஸ்வீடன். உலகின் அனைத்து நாடுகளிலும் ரொக்கப் பணம்தான் முக்கிய மாற்றுக் கருவியாக செயல்படுகிறது. அனைத்து பரிமாற்றங்களுக்கும் மூலமே பணமாக உள்ளது. ஆனால் முதல் முறையாக இந்த வழக்கத்தைத் தகர்த்துள்ளது ஸ்வீடன். பெருமளவு மொபைல் வழி பணம் செலுத்தும் முறை இந்த நாட்டில் வழக்கத்துக்கு வந்துவிட்டதால், இனி பணத்துக்கு வேலை இல்லை எனும் நிலை ஸ்வீடனில் வந்துவிட்டது. ஸ்வீடன் நாட்டின் பணமான ஸ்வீடிஷ் கரோனாவை இப்போது அந்த நாட்டு மக்கள் பெருமளவில் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலான செலுத்துகையை அவர்கள் தங்கள் கடன் அல்லது வங்கி அட்டை, மொபைல் மூலமே செலுத்துகிறார்களாம். இந்த நாட்டில் சின்னச் சின்ன பொருட்களை, சிறு தொகைக்கு வாங்கக் கூட கடன் அல்லது வங்கி அட்டைகளே போதுமானதாக உள்ளன. ஸ்வீடனின் மொத்த பணத்தில் 40 சதவீதம் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. மீதி ப்ளாஸ்டிக் அட்டைகள்தான். மீதி 60 சதவீத ரொக்கம் வாங்கிகள் அல்லது வீடுகளில் தூங்கிக் கொண்டுள்ளது. ஏற்கெனவே ஸ்வீடனின் வங்கிகள் பலவும் ரொக்கப் பணத்தை ஏற்பதில்லை என்று அறிவித்துவிட்டன. இதனால் தன்னிச்சையாக வங்கிப் பரிவர்த்தனை ரொக்கப் பணத்தில் நடைபெறுவதில்லை. இன்று ஸ்வீடனில் ரொக்கத்துக்கு மதிப்பில்லை. அட்டையைக் கொண்டுபோனால், மட்டுமே பணத்துக்கு மதிப்பு. 

ad

ad