புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2015

சுவிசில் கத்தோலிக்க மதம் மாறி ஆன்மீகவாதியாக நடமாடும் கொடூரக் கொலைகாரன் ; பிள்ளையானின் சகா



இந்த பிள்ளையான், சரண் இருவரும் கனத்தையில் உள்ள மின்சார சுடுகாட்டில்  இரவு பத்துமணி தொடக்கம் அதிகாலை
வரை தமிழர்களை அரை உயிருடன் எரித்து மகிழ்வார்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் இருந்தவன்தான் இந்த சரண் . இவனது  உண்மை பெயர் சிவா காந்தன் . கொழும்பில் உள்ள வர்த்தகர்களை கடத்தி கப்பம் கோரியது  மற்றும் கொடூரமாய் கொன்று தள்ளியது எல்லாம் இவனது தலைமையில் இயங்கிய ஒரு குழுவும் காரணம் . தற்போது சுவிசில் அரோவ் என்ற இடத்தில் கத்தோலிக்க மதம் மாறி ஆன்மீக வாதிபோல்  வாழ்கின்றான் . 

எம்பி ரவிராஜ் கொலை ,அட்லஸ் பாலா கொலை ,நீர்கொழும்பில் இருந்து கொழும்பு வரை உள்ள ஒல்லாந்தர் காலத்து  கால்வாயில் உள்ள எலும்புக்கூடுகள்  அனைத்தும் இவனின்  தலைமையில் நடந்த கொலைகளே . இவனுடன்  இவனது வலதுகையாக செயல்ப்பட்ட  அன்னபூர்ணா உணவு விடுதியின் முதலாளி மகன் சுரேஷ் கொழும்பில் வைத்து இனம் தெரியாதோரால்  கடத்தப்பட்டு காணமல் போய்விட்டான் . 

 
இந்த பிள்ளையான், சரண் எல்லோரும் DIG பூஜிதஜெயசுந்தர என்ற  சைகோ கொலைகாரனுக்கு கீழே இயங்கியவர்கள் . கனத்தையில் உள்ள மின்சார சுடுகாட்டில்  இரவு பத்துமணி தொடக்கம் அதிகாலை வரை தமிழர்களை அரை உயிருடன் எரித்து மகிழ்வார்கள் . இதை வீடியோ மூலம் படம் பிடித்த இந்திய ஊடகவியலாளர் மற்றும் உளவுத்துறை அதிகாரி பிரசாந்த் (ஆந்திரா ) வீடியோ மூலம் படம் பிடித்ததை கண்ணுற்று  அவரை விரட்டிச்சென்று  சுட்டு கொன்றனர் . (இந்த விபரம் முழுவதும் இந்திய தூதுவராலயத்துக்கு தெரிந்தும் தமிழின அழிப்பின் முக்கியத்துவம் காரணமாய் அந்த கொலையை விசாரணை செய்யாமல் மூடி மறைத்தனர் ) 

இப்படி பல கொடூரமான கொலைகளை ஈவு இரக்கம் இல்லாமல் செய்தவர்கள் கோத்தாபேயின்  செல்வாக்கால் அகதியாக சுவிசுக்கு அனுப்பபட்டனர் /பிரான்ஸ்  அனுப்பபட்டனர் /கனடா /லண்டன் அனுப்பபட்டனர் . இப்போ தமிழின அழிப்பின் தேவை முடிந்ததும் முதலில் துரோகிகளை அழிக்க தொடங்கியுள்ளனர்

ஒரு மனிதனின் வாழ்வின் பாதையை எப்படி மாற்றியுள்ளனர் என்பதற்கு இதை படியுங்கள். 

சரண் என்கிற சிவா காந்தன் புலிகள் இயக்கம் கருணாவினால் பிளவு பட்டபோது வெளிநாட்டுக்கு போவதற்கு மிகவும் கடுமையாக முயன்றுள்ளான். அந்த முயற்சியில் இந்தியா ,சிங்கபூர் ,தாய்லாந்து போன்ற இடங்களுக்கு சென்று அந்த முயற்ச்சிகள் வெற்றியளிக்கவில்லை. தாய்லாந்தில் போலி பாஸ்போர்டில் பிரயாணம் மேற்கொள்வதை காட்டிக்கொடுத்து அந்த நாட்டில் சிறையில் இருந்துள்ளான்.

அதன் பின்னர் இலங்கை சென்றபோது அங்கே இவனது கூடப்பிறந்த தமையன் (சிறிது மனநலம் பாதிக்கபட்டவர்) அரச புலனாய்வுப் படைகளால் கொல்லப்பட்டார். அந்த பழி புலிகள்மேல் போடப்பட்டது. அதன் பின்னரே சரண் தீவிரமாய் புலி எதிர்ப்பில் அரசுடன் கைகோர்த்து செயற்ப்பட்டுள்ளான். 


பின்னர் அவனுக்கு உண்மை தெரியவந்து சுவிஸ் வந்தானா? அல்லது அவனின் மனைவியின் தூண்டுதலில் வெளிநாடு செல்லனும் என்பதற்கு சுவிஸ் வந்தானா என்பது தெரியவில்லை.

ad

ad