புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2015

மிகத் தெளிவான அரசியல் ஞானம் கொண்டவர் தமிழினி! மாவை சேனாதிராசா அஞ்சலி


தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியற் துறைப்பொறுப்பாளர் தமிழினி அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவை சேனாதிராசா தெரிவிக்கையில்,
நேற்று இரவு கொழும்பு மருத்துவமனையில் சகோதரி சிவகாமியின் உயிர் பிரிந்துவிட்டது என்ற செய்தி கிடைத்ததும் துக்கம் தாளாமல் கண்கள் கலங்கிவிட்டன.
சிவகாமி தமிழினி எனும் இயக்கப் பெயருடன் விடுதலைப் புலிகள் மகளிர் அணியில் அரசியல் துறையில் தன்னைஅர்ப்பணித்திருந்தமையை அறிந்திருந்தேன்.
நல்ல அரசியல் அறிவும் ஆற்றலும் நிறைந்தவராய் விளங்கினார். தலைமைத்துவமும் ஆளுமையும் கொண்டிருந்தார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்டபார்வையும் இனிமையுடன் பழகும் சுபாவமும் பண்பும் நிறைந்த பெண்மணியாக ஒரு தலைமைத்துவமிக்க போராளியாக விளங்கியதை அறிவேன்.
தமிழினியை கிளிநொச்சி, வன்னி, அம்பாறை முதலான இயக்க அலுவலகங்களில் சந்தித்து அரசியல் சார்ந்த விடயங்களைப் பற்றி ஆர்வமுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களை நான் நினைவு கூருகின்றேன்.
நிறைந்த கொள்கைப் பற்றும் இலட்சியதாகமும் அவர் மூச்சாகவும் இருந்ததையும் அறிந்திருக்கிறேன். தமிழின விடுதலைக்காகத் தமிழீழ தேசத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையிலும் போர்ப் படையிலும் மேலும் பலதுறைகளில் பெண்கள் அர்ப்பணிப்புடன் பங்காற்றியிருந்தமையும் கொள்கைக்காகத் தம் உயிரை அர்ப்பணித்தமையும் விடுதலை வரலாற்றில் பெருமையுன் பதிவுசெய்யமுடியும்.
இன விடுதலைப் போரின் பங்காளியாக 2009 வரை  வன்னியில் அர்ப்பணித்து நின்ற வரை இராணுவம் கைது செய்து சிறை முகாமிலும் புனர்வாழ்வு முகாமுக்குள்ளும் அடைத்தது.
அங்கிருந்துநோய்வாய்ப்பட்டு சில ஆண்டுகளில் தன் தாயுடன் இணைந்து கொள்ளும் வாய்ப்புகிடைத்தும் மாறாத நோயினால் மருத்துவமனையில் நேற்று  இரவு இவர் உயிர் பிரிந்துவிட்டாலும் என்றும் தமிழர் நினைவிலிருப்பார்.
எம் இதய அஞ்சலியை அர்ப்பணித்து அன்னார் குடும்பத்தினர் துயரத்தில், கண்ணீரில் கலந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம். என அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad