புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2015

நாசர் 1334 வாக்குகள் பெற்று வெற்றி விஷால் 1376 வாக்குகள் பெற்று வெற்றி கார்த்தி 1384 வாக்குகள் பெற்று வெற்றி




109 வாக்குக்களால் சரத்குமார் தோல்வி 
நடிகர் சங்க தேர்தலில் கார்த்தி வெற்றி பெற்று பொருளாளர் ஆனார். 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.  நேரடியாக 1,824 வாக்குகள் பதிவாகின. தபால் மூலம் 783 வாக்குகள் பதிவாகின.   மொத்தம் 2, 607 வாக்குகள் பதிவாகின.

 பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1334  வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, நடிகர் சங்க தலைவர் ஆனார்.  சரத்குமார் அணியிவக்குககளால் ல் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரத்குமார் 1225 வாக்குகள் பெற்று தோல்வி பெற்றார்.  பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1376 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  ராதாரவி 1085 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.

விஷாலின் பாண்டவர் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி 1384 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.   சரத்குமார் அணி எஸ்.எஸ்.ஆர். கண்ணன் 1031 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.

ad

ad