புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2015

சிலாவத்துறை ஏ.ஞானசீலன், யாழ்ப்பாணம் டி. பிரபாகரன், முழங்காவில சாம் சிவலிங்கம், அம்பலவன் பொக்கணை க.விஜயகுமார் மயக்கம்

இரண்டாவது நாளாகவும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது. இந்தநிலையில் இன்று
கொழும்பு மகசின் சிறைச்சாலையிலும் அநுராதபுர சிறைச்சாலையிலும் ஐந்துபேர் மயக்கமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் மகசின் சிறையில் 28 வயதான கிளிநொச்சியை சேர்ந்த பூபாலசிங்கம் நிசாந்தன் என்பவர் மயக்கமடைந்த நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத்தவிர மன்னார், சிலாவத்துறையைச் சேர்ந்த 32 வயதான ஏ.ஞானசீலன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதான டி. பிரபாகரன், முழங்காவிலை சேர்ந்த 44 வயதான எட்வேட் சாம் சிவலிங்கம் ஆகியோரும் மயக்கமடைந்தனர்.

அநுராதபுரம் சிறையில் அம்பலவன் பொக்கணையை சேர்ந்த 44 வயதான கந்தசாமி விஜயகுமார் என்பவர் மயக்கடைந்துள்ளார்.

இவரின் மனைவி 2009ம் ஆண்டு 3ம் மாதம் 21ம் புதுமாத்தளன் பகுதியில் வைத்து படையினரின் தாக்குதல் ஒன்றில் பலியானார்.

2013ம் ஆண்டு இவர் விடுவிக்கப்பட்ட போதும் அதே தினத்தில் சிஐடியினரால் மற்றுமொரு குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டார் என்று தெரியவந்துள்ளது.

இலங்கையில் உள்ள பல சிறைகளில் உள்ள 273 பேர் இந்த உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ad

ad