புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2015

பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறவிடாதீர்கள்:இந்தியத்தூதுவர்

கிளிநொச்சியில் இந்திய வீட்டுத் திட்டப் பணிக்காகப் பாலியல் லஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில், விசாரணைகளை எதிர்கொள்ளும் அதிகாரிகள் எவரையும்,
விசாரணைகள் முடியும் வரையில் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது என்று, இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளார். 

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில், இந்திய வீடமைப்புத்திட்ட உதவியைப் பெறும் பயனாளிகளிடம், திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்காளரான செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் பாலியல் இலஞ்சம் கோருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் இது தொடர்பிலான முறைப்பாடும், கிளிநொச்சியிலுள்ள செஞ்சிலுவைச் சங்க அதிகாரிக ளுக்கு எழுத்துமூலம் வழங்கப்பட்டது. 
மேலும், இது தொடர்பிலான விசாரணைகள் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், இந்தியத் தூதரகம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்து டன், இந்த விவகாரம் தொடர்பிலான அறிக்கை புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  
இது புதுடில்லியில், வெளிவிவகார தீர்மானங்களை மேற்கொள்ளும் சவுத்புளொக்குக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்  இந்த விவகாரத்தைத் தீவிரமாகவும் எடுத்துக் கொண்டுள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலரும் இந்த விடயத்தில் கரிசனை எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்ளும் அதிகாரிகள் எவரையும், விசாரணைகள் முடியும் வரையில் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று, இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா, வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளார்.
அதிகாரிகள் தப்பிச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. எனவே வெளிவிவகார அமைச்சு மற்றும் அவர்களின் குடிவரவு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த விசாரணைகளை மேற்கொள்ள எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்றும், எனினும், விசாரணைகள் விரைவாகவும், முழுமையாகவும் நடத்தப்படும் என்றும் மற்றொரு இந்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இத்தகையதொரு குற்றச்சாட்டு முதல் முறையாக எழுந்திருப்பதாகவும், இது புதுடில்லியின் மோடி அரசை பெரிதும் சீற்றத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.                                                                                                                      

ad

ad