புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2015

தமிழீழத்தை உருவாக்குவதே கூட்டமைப்பின் நோக்கமாம் : விமல் குற்றச்சாட்டு

தமிழீழத்தை உருவாக்குவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். அதன் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே அரசு செயற்படுகின்றது.
தமிழருக்குச் சாதகமாகவே அரசு செயற்படுகின்றது. இந்த அரசு சிங்களவர்களைக் கருத்திற் கொள்ளவில்லை.இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கேற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது. தமிழீழத்தை உருவாக்குவதே இவர்களின் நோக்கம். இதைத் தடுக்க நாம் முயற்சிகளை மேற்கொண்டால், அரசு எம்மை விமர்சித்து பழிவாங்குகின்றது. நாட்டைப் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. தமிழர் தரப்புக்கு சாதகமாகவே அரசு செயற்படுகின்றது. சிங்கள மக்களுக்கு சார்பாக அரசு செயற்படுவதில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவைத் தவிர, அரசின் எந்த நிறுவனங்களிலும் தற்போது எவ்வித பணிகளும் நடப்பதில்லை. வெளிநாடு புறப்பட்டுச் சென்றபோது புலனாய்வுப் பிரிவினர் என்னை விமான நிலையத்தில் தடுத்துவைத்தனர். அதற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படும். வெள்ளிக்கிழமை நான் இந்தச் சம்பவத்தை எதிர்நோக்கியிருந்தேன். அன்றைய தினம் என்னை விளக்கமறியலில் வைத்திருந்தால், திங்கட்கிழமை வரை பிணை பெற முடியாது. நீதிமன்றத்திடம் நியாயம் கிடைத்தது என்றார் விமல்.

ad

ad