புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 நவ., 2015

ரஷிய விமானத்தை வீழ்த்தியது நாங்களே.. சம்பவத்துக்கு ஐ.எஸ் பொறுப்பெடுத்துள்ளதாக வெளியாகிய வீடியோவால் பரபரப்பு


ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது விபத்துக்குள்ளாகவில்லை என்றும், தீவிரவாதிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தற்பொழுது செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
எகிப்தில் இருந்து ரஷ்யாவுக்கு 224 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் சினாய் தீபகற்பம் பகுதியில் வெடித்து சிதறியது. சினாய் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தை தாக்கியது தாங்கள் தான் என ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.
சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாத குழுக்களின் அமைவிடங்களில் புடின் அரசு நடத்திவரும் வான் தாக்குதலுக்கு பதிலடி தரும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
வெடித்து சிதறிய விமானத்தின் பாகங்கள் ஐ.எஸ்.குழுவினர் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் சிதறுண்டு கிடப்பதாக பாதுகாப்பு மற்றும் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை இங்கே காணலாம்.