புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2015

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (24-ம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பலத்த மழை பெய்தது.

இதில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 200-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.

மழை காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நவம்பர் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை மற்றும் திருவள்ளூரில் விட்டுவிட்டு மழை பெய்தது. மேலும், நேற்று (22-ம் தேதி) கனமழை பெய்தது. இதனால், இன்று (23-ம் தேதி) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றும் கனமழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (24-ம் தேதி) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

ad

ad