புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2015

நாளை சபரிமலை கோயில் நடை திறப்பு


 மண்டல கால பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (16ம் தேதி) மாலை  திறக்கப்படுகிறது. கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் தொடங்கி 41 நாள் நடைபெறும் மண்டல கால பூஜைகள் பிரசித்தி பெற்றதாகும். இதையொட்டி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

இவ்வருட மண்டல கால பூஜைகள் வருகிற 17ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனரர் முன்னிலையில் தற்போதைய மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார். பின்னர் இரவு 7 மணியளவில் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். சபரிமலை கோயிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சங்கரன் நம்பூதிரியும், மாளிகைப்புரம் கோயிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உண்ணிகிருஷ்ணனும் புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்பார்கள். இவர்களுக்கு தந்திரி கண்டரர் மகேஷ் மோகனரர் மூலமந்திரங்களை சொல்லிக் கொடுப்பார்.

பின்னர் இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். மறுநாள் (17ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி சபரிமலை கோயில் நடையையும், உண்ணி கிருஷ்ணன் மாளிகைப்புரம் கோயில் நடையையும் திறப்பார். 

அடுத்த ஒரு வருடத்திற்கு இவர்களது தலைமையில் தான் சபரிமலையில் அனைத்து முக்கிய பூஜைகளும் நடைபெறும்.  17ம் தேதி முதல் கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். டிசம்பர் 27ம் தேதி வரை தினமும் அதிகாலை 4.30 மணி முதல் காலை 11 மணிவரை நெய்யபிஷேகமும் நடைபெறும். 41வது நாளான டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவுடன் மண்டல கால பூஜைகள் நிறைவடையும். மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்படும்.

ad

ad