புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2015

அஸ்வின் 30 டெஸ்டில் 157 விக்கெட் எடுத்து சாதனை

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக விளையாடியுள்ளார்.
நேற்று நடைபெற்ற 2 வது டெஸ்ட்டில் 70 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வான்ஜில், டுபெலிசிஸ், டுமினி, மார்னே மார்கல் ஆகியோரை அவுட் செய்தார்.
அஸ்வின் 30 டெஸ்டில் 157 விக்கெட் எடுத்துள்ளார். இதன்மூலம் சென்னையை சேர்ந்த முன்னாள் பிரபல சுழற்பந்து வீரரும், முன்னாள் அணித்தலைவருமான எஸ்.வெங்கட்ராகவனை அவர் முந்தியுள்ளார்.
வெங்கட்ராகவன் 57 டெஸ்டில் விளையாடி (1965–1983) 156 விக்கெட் எடுத்துள்ளார். சராசரி 36.11. ஒரு ஓவருக்கு கொடுத்த ரன் சராசரி 2.27 ஆகும். 72 ரன் கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றியது. சிறந்த பந்துவீச்சு ஆகும். 3 முறை 5 விக்கெட்டுக்கு மேலும் ஒரு தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.
அஸ்வின் 55 இன்னிங்சில் 157 விக்கெட் கைப்பற்றியுள்ளார். சராசரி 27.29. ஒரு ஓவருக்கு கொடுத்த ரன் சராசரி 2.99 ஆகும். 103 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது. ஒரு இன்னிங்சின் சிறந்த பந்துவீச்சு ஆகும். 13 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், 3 முறை 10 விக்கெட்டுக்கு மேலும் எடுத்துள்ளார்.

ad

ad