புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2015

அரசாங்கம் அசமந்தப்போக்கை கடைப்பிடிக்குமாக இருந்தால்கூட்டமைப்பு எதிராக செயற்படும்! அ.கோடீஸ்வரன் எச்சரிக்கை

ஏமாற்றங்கள் தொடருமானால் கூட்டமைப்பு எதிராக செயற்படும்! அ.கோடீஸ்வரன் எச்சரிக்கை
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் அசமந்தப்போக்கை கடைப்பிடிக்குமாக இருந்தால், அரசுக்கு எதிராக எதிர்காலத்தில் குரல் கொடுக்கவேண்டி வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் அ.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத்தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
ஒட்டு மொத்த தமிழ்மக்களினதும் ஏக பிரதிநிதிகளாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருப்பதானல் எமது மக்களுக்காக எந்த நேரத்திலும் குரல்கொடுக்க வேண்டிய தார்மீக கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளிடமும் இருக்கின்றது என்பதனை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
சாதாரணமான விடயமாக பார்க்கப்படும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அக்கரையின்றி செயற்படும் மைத்திரிபால தலைமையிலான அரசு சர்வதேச நாடுகள் பல ஒன்றினைந்து ஐக்கிய நாடுகள் சபையிலே எடுக்கப்பட்ட தீர்மானத்தினை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்போகின்றார்கள் என்பது கேள்விக் நியானதொன்றாகவே இருக்கின்றது.
அவ்வாறு தமிழர்களது விடயத்தில் எதிர்காலத்தில் இந்த அரசு சரியான தீர்மானங்களை எடுக்கத்தவறும் பட்சத்தில் த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்கள் நலன் கருதி சில தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படும் எனவும் கூறினார்.

ad

ad