புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2015

வடக்கு, கிழக்கில் ஓயாத மழை தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மூழ்கின - போக்குவரத்துப் பாதிப்பு - மீள்குடியேறிய மக்கள் தத்தளிப்பு

TNA Canada இன் புகைப்படம்.


வடக்கு கிழக்கு பிர­தே­சத்தில் கடந்த சில தினங்­க­ளாக பெய்­து­வரும் அடை­மழை கார­ண­மாக தாழ்ந்த பிர­தே­சங்கள் வெள்ளக்­கா­டாக காட்­சி­ய­ளிக்­கின்­றன.
இதனால் போக்­கு­வ­ரத்து பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் மக்கள் மிகுந்த அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ளனர்.
குறிப்­பாக வட­ப­கு­தியில் மீள் குடி­யே­றிய கிரா­மங்கள் பல வெள்ளத்தில் மூழ்­கி­யுள்­ளதால் அவர்­களின் இயல்பு நிலை மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
வடக்கில்
வட­மா­கா­ணத்தில் தொடர்ச்­சி­யாக பெய்­து­வரும் அடை­ம­ழையின் கார­ண­மாக பல பகு­தி­களில் வெள்ள நிலை ஏற்­பட்­டுள்­ள­துடன் மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
கிளி­நொச்சி மாவட்­டத்தின் சில பிர­தே­சங்கள் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன், அந்தப் பகு­தியில் மீட்புப் பணி­களும் இடம்­பெற்று வரு­வ­தாக அனர்த்த முகா­மைத்துவ நிலை­யத்தின் பணிப்­பாளர் தெரி­வித்­துள்ளார்.
புத்­தளம் மாவட்­டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்­கி­யுள்­ள­தோடு எளு­வன்­கு­ளத்தின் போக்­கு­வ­ரத்து தடைப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் தெரி­வித்­துள்­ளது.
கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களின் தாழ் நிலப்­ப­கு­தி­களில் வெள்ள நீர் தேங்­கி­யுள்­ள­தோடு குறுக்கு வீதி­களின் ஊடாக போக்­கு­வ­ரத்தும் பாதிப்­ப­டைந்­துள்­ளது. குறிப்­பாக சாந்­த­புரம் மற்றும் பொன்­னகர் பகு­தி­களில் மழை வெள்­ளத்­தினால் 60 இற்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
சாந்­த­புரம் பகு­தியில் மழை­யுடன் வீசிய கடும் காற்று கார­ண­மாக சுமார் 50 வீடுகள் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும், இவற்றுள் 18 வீடுகள் முழு­மை­யா­கவும், 32 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. இந்த வீடு­களில் இருந்து இடம்­பெ­யர்ந்­த­வர்கள் உற­வி­னர்கள் மற்றும் நண்­பர்கள் வீடு­களில் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­தா­கவும் கிளி­நொச்சி மாவட்ட இடர் முகா­மைத்­துவப் பிரிவு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
இது­த­விர பொன்­னகர் பகு­தி­யிலும் 12 குடும்­பங்கள் மழை வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்டு முறி­கண்டி வித்­தி­யா­ல­யத்தில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
சில இடங்­களில் 3 அடி உய­ரத்­திற்கு வெள்ளம் தேங்­கி­யுள்­ள­தா­கவும், அந்த பகு­தி­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை இரா­ணு­வத்­தி­னரின் ஒத்­து­ழைப்­புடன் மீட்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நிவா­ரண உத­வி­களை மாவட்ட இடர் முகா­மைத்­துவப் பிரிவு மேற்­கொண்டு வரு­கின்­றது.
தி­க­மழை கார­ண­மாக இரா­ஜாங்­கனை, தப்­போவ, தெது­ரு­ஓயா, உட­வ­ளவ ஆகிய நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்டம் அதி­க­ரித்­துள்­ள­தோடு அவற்றின் வான் கத­வு­களும் திறந்து விடப்­பட்­டுள்­ளன.
கிளி­நொச்சி பரந்தன், சிவ­புரம் வெள்­ளத்தில்
கிளி­நொச்சி மாவட்­டத்தில் கடந்த மூன்று நாட்­க­ளாக பெய்து வரும் கடும் மழை கார­ண­மாக 502 குடும்­பங்­களைச் சேர்ந்த 1646 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாவட்ட அனர்த்த முகா­மைத்துவப் பிரிவு அறி­வித்­துள்­ளது.
கடும் மழை­யுடன் கூடிய கால நிலை கார­ண­மாக இது­வ­ரைக்­கும் ­நேற்று சனிக்­கி­ழமை மதியம் வரை மாவட்­டத்தில் 502 குடும்­பங்­களைச் சேர்ந்த 1646 பேர் பாதிக்ப்­பட்­டுள்­ள­தோடு 19 வீடுகள் முற்­றாக சேத­ம­டைந்தும், 209 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்தும் காணப்­ப­டு­கின்­றன
இதே­வேளை 99 குடும்­பங்­களைச் சேர்ந்த 346 பேர் மழை­யினால் பாதிக்­கப்­பட்டு உற­வி­னர்கள் நண்­பர்கள் வீடு­க­ளிலும் தங்­கி­யுள்­ளனர் என மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவப் பிரிவின் புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.
மேலும், கிளி­நொச்சி கரைச்சி பிர­தேச செய­லக பிரிவின் பொன்­னகர் மத்தி 36 குடும்­பங்­களைச் சேர்ந்த 120 பேர் இடம்­பெ­யர்ந்து திரு­மு­றி­கண்டி இந்து வித்­தி­யா­ல­யத்தில் தங்­கி­யுள்­ளனர். வெள்­ளிக்­கி­ழமை இரவு இவர்க­ளது வீடு­க­ளுக்கு வெள்ள நீர் வெகு­வாக கழுத்து மட்டம் வரை உயர் வ­டைந்­த­மை­யினால் பிர­தே­சத்தில் உள்ள இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் வெளி­யேற்­றப்­பட்டு பாட­சா­லையில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
அத்­தோடு முல்­லைத்­தீவு ஒட்­டுச்­சுட்டான் பிர­தேச செய­லக பிரிவைச் சேர்ந்த திரு­மு­றி­கண்­டியில் 24 குடும்­பங்­களைச் சேர்ந்த 72 பேர் இதே பாட­சா­லையில் தங்­கி­யுள்­ளனர்.
இவர்கள் அனை­வ­ருக்கு­மான சமைத்த உண­வு­களை மாவட்ட அனர்த முகா­மைத்­துவ பிரிவு வழங்கி வரு­கி­றது
பெய்து வரும்­கடும் மழை கார­ண­மாக வெள்­ளத்தில் அடித்துச் செல்­ல­ப்பட்டு ஒருவர் இறந்­துள்­ள­தோடு ஒருவர் காய­ம­டைந்­துள்­ளார்­ என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.
கிளி­நொச்­சியில்
கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள இர­ணை­மடு குளத்தின் ஐந்து வான் கத­வுகள் நேற்று சனிக்­கி­ழமை திறக்­கப்­பட்­டுள்­ளன.
வடக்கின் மிகப்­பெ­ரிய நீர்த்­தேக்­க­மான இர­ணை­மடு குளத்­திற்கு தற்­போது பெய்து வரும் கடும் மழை கார­ண­மாக அதி­க­ளவு நீர் வந்­து­கொண்­டி­ருக்­கி­றது. எனவே, அதி­க­ரித்த நீர் குளத்­திற்கு வரு­வ­தனால் முதற்­கட்­ட­மாக ஐந்து வான்­க­த­வு­களும் நேற்று திறக்­கப்­பட்­டுள்­ளன.
குளத்தின் புன­ர­மைப்பு பணிகள் தற்­போது இடம்­பெ­று­வ­தனால் இவ்­வ­ருடம் குளத்தின் நீர் மட்­டத்­தினை 24 அடி­யாக வைத்­தி­ருப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் தற்­போது குளத்தின் நீர் மட்டம் நேற்றுக் காலை 28 அடி 5 அங்­கு­ள­மாக காணப்­பட்­டுள்ள நிலையில் குளத்தின் ஐந்து வான் கத­வுகள் ஒரு அடி வரை திறக்­கப்­பட்­டுள்­ளது.
மேலும், தொடர்ச்­சி­யாக பெய்து வரும் கடும் மழை­யுடன் கூடிய மழை­வீழ்ச்சி காணப்­ப­டு­மானால் மேலும், ஏனைய வான்­க­த­வு­களும் திறக்­கப்­படும் என கிளி­நொச்சி பிராந்­திய பிரதி நீர்ப்­பா­சன பணிப்­பாளர் சுதா­கரன் தெரி­வித்­துள்ளார்
மேலும், குளத்தின் கீழ் நீர் செல்லும் தாழ் நிலப் பகு­தி­களில் வசித்து வரும் மக்கள் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறும் அவர் கேட்­டுக்­கொண்­டுள்ளார்
இதேவேளை, நேற்­றைய தினம் குளத்­திற்கு விஜயம் செய்த இயற்கை வளங்கள் மற்றும் வன­ஜீ­வ­ரா­சிகள் பாது­காப்பு அமைச்சர் காமினி ஜெய­விக்­கி­ரம பெரே­ராவும் இர­ணை­மடு குளத்தின் நிலை­மை­களை அவதானித்துள்ளார்.
கிழக்கில்
கிழக்கு மாகா­ணத்தில் மீண்டும் தொடரும் அடை மழை­யினால் மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களைச் சேர்ந்த மக்­களின் இயல்பு நிலை வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தாழ்­நி­லப்­ப­கு­தி­களும் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் களு­வாஞ்­சிக்­குடி, ஆரை­யம்­பதி, காத்­தான்­குடி, வவு­ண­தீவு, ஏறாவூர், செங்­க­லடி, சித்­தாண்டி, முறக்­கொட்­டாஞ்­சேனை, கிரான், வாழைச்­சேனை, வாகரை போன்ற பகு­தி­க­ளிலும் அம்­பாறை மாவட்­டத்தின் கல்­முனை, காரை­தீவு, சம்­மாந்­துறை, அக்­க­ரைப்­பற்று, சவ­ளக்­கடை மத்­திய முகாம் பகு­தி­களும் வெள்­ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

ad

ad