-

10 நவ., 2015

இலங்கையில் பார்க்கிங் மீற்றர் திட்டம் விரைவில்

கொழும்பு காலி வீதியுடன் இணையும் அனைத்து பிரதான வீதிகளுக்கும் பார்க்கிங் மீட்டர் இணைக்கப்படவுள்ளதாக மாநகர சபை நேற்று அறிவித்துள்ளது.

இத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பணிப்பாளர் நிஹால் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.  
அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாக இரண்டு சாலைகளில் 125 பார்க்கிங் மீட்டர் பொருத்தப்படவுள்ளது.இத்திட்டம் நிறைவு பெற சுமார் ஆறு மாத காலம் எடுக்கும்.காரணம், இதற்கான நிதிகள் என்பவற்றை நாம் முதலில் திரட்ட வேண்டும். அதன் பின்னரே இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

தற்காலிகமாக பொழும்பு மாநகராட்சி பகுதியில் உள்ள பார்க்கிங் பகுதிகளில் நிதி சேகரிப்பு திட்டம் ஏற்பர்டு செய்யப்பட்டுள்ளது.

இக்கட்டணமானது. வாகன சாரதிகளின் பணம், கடன் அட்டை அல்லது ஏனைய அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

மேலும், இத்திட்டத்திற்கான மொத்த செலவு புதிய கட்டணங்களை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதல் முறையாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                                             

ad

ad