புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2015

11 ஆயிரம் பேரால் வராத ஆபத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் எவ்வாறு வரும் -சித்தார்த்தன் நா. உ

 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக தீவிரமாக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்
சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
எனினும் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை மூன்று பிரிவாக பிரித்து வைத்து இந்த விடயத்தினை இழுத்தடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மாதம் இந்த விடயத்தினை வலியுறுத்தி இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்ததாகவும் ஆனால் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதியினை அடுத்து இந்த போராட்டம் கைவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அரசாங்கம் இவ்வாறு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து; செயற்படுவது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று அல்ல என அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் நல்லாட்சி அரசாங்கத்துக்கு பாரதூரமான விடயமகும் என கூறிய அவர் தமிழ் மக்கள் புதிய அரசாங்கத்தையே நம்பி வாக்களித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனினும் அரசாங்கம் இந்த விடயங்களை அரசாங்கம் புறந்தள்ளி செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் 11 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறிருக்க 11 ஆயிரம் பேரால் வராத ஆபத்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் எவ்வாறு வரும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனவே இவ்வாறான விடயங்களை கவனத்தில் கொண்டு அவர்களை விரைவில் விடுதலை செய்யவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் விடுதலையை நோக்கியதாக மட்டும் இருக்க வேண்டும் என கூறிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அதற்கான பூரன ஒத்துழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கும் என குறிப்பிட்டார்.
இதேவேளை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாகவும் அதன் மூலம் நல்ல தீர்வு கிட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார். thanks lankasri

ad

ad