புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2015

பேருந்துகள் உடைப்பு- போலீஸ் தடியடி: அஜித் ரசிகர்களால் போர்க்களமான மதுரை! (வீடியோ)

மதுரையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு, 5 பேருந்துகளை உடைத்ததால் காவல்துறையினர் தடியடி
நடத்தினர். இந்த சம்பவங்களால் மதுரையில் உள்ள தியேட்டர்கள் வளாகங்கள் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
நடிகர் அஜித்குமாரின் வேதாளம் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் பேனர்கள் வைத்து தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். மதுரையில் ரசிகர்கள் பேருந்துகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் உள்ள தமிழ் ஜெயா, திருநகரில் உள்ள மணின்பாலா உள்ளிட்ட பல்வேறு தியேட்டர்களில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரசிகர்களுக்கு என்று பிரத்யேக காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அதிகாலை முதலே ரசிகர்கள் குவிந்தனர். தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த அஜித் படத்துக்கு ரத்தத்தால் ரசிகர்கள் அபிஷேகம் செய்தனர்.
 
தமிழ் ஜெயா தியேட்டரில் படம் ஒளிபரப்ப தாமதம் ஆனதால் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் 4 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தது. மேலும், பேருந்தில் ஏறிய ரசிகர்கள் வெடிகளை வெடித்தனர். இதனால் பயணிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை கவிழ்த்தனர். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். ரசிகர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடியதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

மேலும், திருநகரில் உள்ள மணின்பாலா தியேட்டரிலும் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு, அரசு பேருந்து ஒன்றின் கண்ணாடிகளை உடைத்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
 
பாலவாக்கத்தில் உள்ள மதி தியேட்டரில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். பதிலுக்கு ரசிகர்களும் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் அந்த இடமே பரபரப்புக்குள்ளானது.

அஜித் ரசிகர்களின் இந்த ரகளையால் மதுரையில் உள்ள தியேட்டர் வளாகங்கள் போர்க்களம் போல் காட்சி அளித்தது.  

படங்கள்: இ.ஜெ.நந்தகுமார்

வீடியோ: நிவேதன்

ad

ad