புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2015

அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் கேட்டால் 1954க்கு அழையுங்கள்

அரசாங்க ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றனர். ஆகவே மக்களுக்காக அவர்கள் கடமையாற்ற வேண்டியவர்கள். அவர்களிடமிருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள மக்களுக்கு உரிமையுண்டு. அதற்காக இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் கேட்டால் அது தொடர்பில் 1954 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும் இவ்வாறு இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் டயஸ் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் கபே அமைப்பு ஆகியன இணைந்து இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் அரச நிறுவனங்களுக்குச் சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் மாற்றங்களை உருவாக்கி வருகின்றோம். இலஞ்சம் மற்றும் ஊழலை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம். உயர்மட்டத்திலுள்ள இவ்வாறான விடயங்களை கையாள புதிய குழுவொன்று உருவாக்கியுள்ளோம். பொதுமக்கள் எங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு தந்தால் எங்களால் வெற்றிகரமாக செயற்படமுடியும் என்றார்.

ad

ad