சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் கூடுதலாக 200 வெள்ள நிவாரண சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம்களில் மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை ஆகியவை அளிக்கப்படும் என்றும், மக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சென்னையில் கூடுதலாக 200 வெள்ள நிவாரண சிறப்பு முகாம்கள் அமைப்பது தொடர்பாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவ,ர் அரசு சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 200 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.