புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2015

சென்னை வெள்ள நிவாரணத்துக்கு தெலுங்கு நடிகர்-நடிகைகள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள்; இதுவரை ரூ.66 லட்சம் குவிந்தது

சென்னை வெள்ள நிவாரணத்துக்கு தெலுங்கு நடிகர்கள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள். இதுவரை ரூ.66 லட்சம் குவிந்துள்ளது.


நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். ‘பாகுபலி’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரபாஸ் ரூ.15 லட்சமும், மகேஷ்பாபு ரூ.10 லட்சமும், ரவிதேஜா ரூ.5 லட்சமும், கல்யாண்ராம் ரூ.5 லட்சமும், சாய்தரம் தேஜா ரூ.3 லட்சமும், வருண் தேஜா ரூ.3 லட்சமும், சம்பூர்ணேஷ் ரூ.50 ஆயிரமும், வழங்குகிறார்கள். 

தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் 50 ஆயிரம் உணவு பொட்டலங்களை அனுப்பி வைத்துள்ளார். இதுவரை ரூ.66 லட்சத்து 50 ஆயிரம் குவிந்துள்ளது.

‘நான் ஈ’ படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமான நடிகர் நானி கூறும்போது ‘பிரபல தெலுங்கு நடிகர், நடிகைகள் 10 பேர் ஐதராபாத்தில் உள்ள பிரபலமான வணிக வளாகங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழக வெள்ள நிவாரணத்துக்காக உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்ய இருக்கிறோம்’ என்றார். 

தெலுங்கு நடிகர் ராணா தனது டுவிட்டரில் ‘வெள்ள நிவாரணத்துக்கு உதவ தாராளமாக காசோலைகளை ராமாநாயுடு அறக்கட்டளை என்ற பெயருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவை சென்னைக்கு அனுப்பப்படும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். நடிகை ரகுல்பிரீத் சிங்கும் வெள்ள நிவாரணத்துக்கு உதவும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ad

ad